பொள்ளாச்சி அருகே முக்கிய சாலையின் நடுவே சந்தை!!

      -MMH


   கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் கனரா வங்கி அருகே மிகவும் குறுகலான பகுதியில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள மீன்கரை சாலையின் மிக அருகில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது இந்த சந்தையில் நூற்றுக்கும்  அதிகமான வியாபாரிகள் கடைகளை அமைத்து காய்கறி உள்ளிட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விற்று வருகின்றனர்.



  இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் மளிகைப் பொருட்களை வாங்க அதிகளவில் கூடுகின்றனர். நாளுக்கு நாள் நோய் தொற்று பரவல் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் அதிக அளவு கூடுவதால் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதாக இப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


 மெயின் ரோட்டில் மிக அருகில் சந்தை நடைபெறுவதால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை மெயின் ரோட்டில் நிறுத்தி விட்டு பொருட்களை வாங்க சென்றுவிடுகின்றனர். இதனால் வாகன விபத்துகளும் மற்றும் வாகன நெரிசலும் ஏற்படுகிறது.


    மேலும் இனி வரும் காலங்களில் பெரிய அளவிலான விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க இப் பகுதியில் செயல்பட்டு வரும் வாரச்சந்தை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய வேறொரு பகுதிக்கு மாற்றி அமைத்து தரும்படி இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கையாக முன் வைக்கிறார்கள் இந்தப் பகுதி ஆபத்தான வளைவு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.


Comments