காந்தி ஜயந்தி இறைச்சி விற்பனைக்குத் தடை..!

      -MMH


      காந்தி ஜயந்தி இறைச்சி விற்பனைக்குத் தடை கோவை மாநகரில் காந்திய ஜயந்தியையொட்டி (அக்டோபர் 2) இறைச்சி விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


    காந்தி ஜயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழிகளை வதை செய்வதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநகரில் உள்ள இறைச்சிக் கடைகளை மூட வேண்டும். அந்த நாளில் மாநகரில் செயல்படும் ஆடு, மாடு அறுவைமனைகளும் செயல்படாது என்றும், உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.


-அருண்குமார்,கோவை மேற்கு.


Comments