மருத்துவர், செவிலியர்களுக்கு கொரோனா!! - அவிநாசி அரசு மருத்துவமனை மூடல்!!

       -MMH 


அவிநாசி அரசு மருத்துவர், செவிலியர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்பட்டது.


அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவர்கள், 25க்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இம்மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மருத்துவமனையில் பணிபுரியம் ஒரு மருத்துவர் (தலைமை மருத்துவர் பொறுப்பு) , 3செவிலியர், ஒரு ஆய்வகப் பணியாளர், ஒரு மருத்துவமனைப் பணியாளர் என 6 பேருக்கு திங்கள்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.


அக்டோபர் 1ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் பிரதான மருத்துவமனையாக உள்ளதால், ஏராளமானோர் மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.


மேலும் அவிநாசி அரசு மருத்துவமனை மூடப்பட்டதால், கொரோனா பரிசோதனைக்காக வருபவர்கள், அவிநாசி வட்டார மருத்துவமனையான சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றதில், திங்கள்கிழமை ஓரே நாளில் மட்டும் 400க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments