தங்கம் விலை குறைவு மக்கள் மகிழ்ச்சி!!

     -MMH


    தமிழகத்தில் நான்கு நாட்களில் மட்டும் ஆபரண தங்கம் விலை பவுனுக்கு 1208 ரூபாய் சரிந்துள்ளது. இதனையடுத்து பலரும் தங்க ஆபரணங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


       தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4915 ரூபாய்க்கும்; பவுன் 39 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையாகின.பின் தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் கிராம் 4820 ரூபாய்க்கும்; பவுன் 38 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகின. கிராம் வெள்ளி 63.30 ரூபாயாக இருந்தது.இந்நிலையில் நேற்று தங்கம் கிராமுக்கு 56 ரூபாய் குறைந்து 4764 ரூபாய்க்கும்; பவுனுக்கு 448 ரூபாய் சரிந்து 38 ஆயிரத்து 112 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 2.90 ரூபாய் குறைந்து 60.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து நான்கு நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு 151 ரூபாயும்; பவுனுக்கு 1208 ரூபாயும் சரிந்துள்ளது. தங்கம் விலை குறைந்து வருவதால் பலரும் தங்க ஆபரணங்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.


 -அருண்குமார்,கோவை மேற்கு.


Comments