வீணாகும் தண்ணீர்!! - கண்டுக்கொள்ளாத மாநகராட்சி!!

        -MMH


       கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் மெயின் ரோடு ஈஸ்வர் நகர் அருகில் தண்ணீர் டேங்க் ஒன்று உள்ளது. அதன் அருகில் கடந்த சில நாட்களாக ரோட்டோரத்தில் தண்ணீர் குழாய் உடைந்து நான்கைந்து நாட்களாகவே தண்ணீர் வீணாகி போகும் நிலை உள்ளது.பைப்பு உடைந்த நிலையில் தண்ணீர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போகுமாறு உள்ளது.இதனால் ரோடு அரிப்பு ஏற்படும் நிலையும் கனரக வாகனங்கள் அதிகப்படியாக செல்வதால் உடைந்த பகுதியில் பட்டு குழி பெரிதாகும் நிலையும் உள்ளது.இதனை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் உடனடியாக அந்த தண்ணீர் குழாய் உடைந்துதண்ணீர் வீணாவதை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கிறார்கள்.


-ஈஷா,கோவை.


Comments