கோவை குறிச்சி குளக்கரையில் அசத்தும் பூங்கா!!

   -MMH 


கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் மக்களை மகிழ்விக்க உருவாகிக்கொண்டிருக்கும் அசத்தும் குளக்கரை பூங்கா!!!! - நமது கோவை மாவட்டத்தில் பல சிறப்பு அம்சங்கள் இருக்கிறது.ஆதிமுதல் நாட்களிலிருந்தே பல தொழில்கள் இயங்கும் மாநகரமாக விளங்கிவருகின்றது. எல்லோரும் வியந்து பார்க்கும் அளவு பேர் இடத்தை கோயம்புத்தூர் நகரம் பெற்று இருக்கிறது.இந்த நிலையில் நமது கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் அமைந்துள்ள குறிச்சி குளம் என்று சொல்வார்கள்.ஆதிமுதல் நாட்களிலிருந்தே மழை காலங்களிலும் மற்ற நேரங்களிலும் நீர் வரத்து உடன் காணப்படும்.இந்த சூழ்நிலையில் அந்தக் குளக்கரை பராமரிக்கப்படாமல் இருந்தது.தற்பொழுது அரசாங்கமும் கோவை மாநகராட்சியும் அந்த குளக்கரையை சுத்தம் செய்து சுற்றியும் பூங்காக்களை அமைப்பதற்கு ஏற்பாடுகளும் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தற்பொழுது அதற்கான வேலைகள் மிக படுவேகமாக நடந்து கொண்டு வருகிறது.சமீபத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் அந்த குளக்கரையை மேம்பாடு செய்வதற்காக அடிக்கல் நாட்டி சென்றிருக்கிறார். இன்று இந்த சூழ்நிலையில் இந்த மழை காலத்தில் இன்று அந்த குளம் நிரம்பி காணப்படுகிறது.பெரிய வெள்ளம் அணை போல் காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.அந்த வழியே வாகனத்தில் செல்வர்களும் இறங்கி அந்த வெல்லத்தின் அழகை கண்டு ரசித்து மிகவும் மன மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருக்கின்றனர்.15 வருடங்களுக்கு முன்பு அந்தக் குளக்கரை நிரம்பி வழிந்தது போல் இன்று நிரம்பி காணப்படுகிறது என்று அந்த சுற்றுவட்டார மக்கள் சொல்கிறார்கள்.


   


மேலும் மாநகராட்சி அறிவித்தது போல அந்த குளக்கரையை சுற்றி ஒரு பாதுகாப்பு ஏற்பாடு செய்து படகு சவாரி மற்றும் பூங்காக்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று மாநகராட்சி அறிவித்ததை மக்கள் எதிர்நோக்கி கொண்டு அந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் மிகவும் மன மகிழ்ச்சியுடன் என்று அந்த இனிமையான நாட்கள் வரும் என்று அந்த குளக்கரையை பார்த்துக் கொண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். 


-கிரி,கோவை மாவட்டம்.


Comments