கட்டு கட்டாய் கள்ள ரூபாய் நோட்டுகள்! - கோவையில் பரபரப்பு..!

     -MMH


கோவையில் 7.36 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டு பறிமுதல் செய்த போலீசார், இருவரை தேடி வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த இளம்பெண் சமீபத்தில் மாயமானது குறித்து, திருமயம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாயமான பெண், கோவை பீளமேடு குமரன் மாநகரில் ரஞ்சித்குமார், 23 என்பவருடன் தங்கியிருப்பது தெரிந்தது.திருமயம் போலீசார், அளித்த தகவலின்படி, கோவை பீளமேடு போலீசார் மாயமான பெண்ணின் தந்தை உடன் குறிப்பிட்ட வீட்டுக்கு சென்றனர்.


வீடு பூட்டப்பட்டிருந்ததால், போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தனர். வீட்டில், 7.36 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.விசாரணையில், அசல் 2,000 ரூபாய் நோட்டுகளை நகல் எடுத்து, கள்ள நோட்டுகளாக, புழக்கத்தில் விட தயாரித்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மாயமான ரஞ்சித் குமார் மற்றும் அவருடன் தங்கிய பெண் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


-சுரேந்தர் கோவை கிழக்கு.


Comments