கோவையில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது!!

      -MMH


      ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கோவை மாவட்ட பொதுக்குழு  25-10-2020 மாலை 7  மணியளவில் நடைபெற்றது. 


      இதற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது சமீர் தலைமை தாங்கினார், இதில் அமைப்பின் தலைவர் அல்தாஃபி மற்றும் செயலாளர் நசீர் அஹமத், மற்றும் . மாவட்ட , கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  
இதில் மாவட்ட செயல்பாடுகளை மாவட்ட செயலாளர் காஜா உசைன் விளக்கினார் , வரவு - செலவு கணக்கை பொருளாளர் ஆரிஃப்  சமர்பித்தார்.  பசித்தோருக்கு உணவளிப்போம் திட்டத்தில் வரவு செலவு விபரங்களை சகோ. சலாவுதீன் பகிர்ந்து கொண்டார்.


      இதனை தொடர்ந்து “பாதையும் லட்சியமும்”  என்ற தலைப்பில் அல்தாஃபி உரையாற்றினார். உரையில் கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகள், செய்ய தவறியவை, செய்ய வேண்டியவை, சமூக முன்னேற்றத்திற்கான நமது செயல்பாடுகளும் அதன் இலக்கும் என்பதனை விளக்கினார்.      நிர்வாக தேர்வை சகோ. நசீர் அஹமத் நடத்தினார். கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். 


மாவட்ட தலைவர் - முஹம்மது சமீர் 
மாவட்ட செயலாளர்- காஜா உசைன் 
மாவட்ட பொருளாளர் - ஆரிஃப்
துணைத் தலைவர் - ஹபீபுல்லாஹ்
துணை செயலாளர்கள்- A.W . சலாவுதீன் பஷீர் அஹமத், கரும்புக்கடை அபி.


   பொதுக்குழுவில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:


      சமீபத்தில் மனு நீதியில் கூறப்பட்டுள்ள  பெண்களின் நிலை குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் பேராசியர் தொல் திருமாவளவன் ஆற்றிய உரைக்கு பலரும் பல்வேறு விதங்களில் எதிர்வினையாற்றி வருகின்றனர். 


      இதில் இந்துத்துவாவினர் அவரது உரைக்கு பதிலளிக்கிறோம் என்ற பெயரில் அதற்கு சற்றும் தொடர்பில்லாத குர் ஆணையும்  , நபிகள் நாயகத்தையும் , இஸ்லாத்தையும் இழித்தும் பழித்தும் பேசி வருகின்றனர்.  


      மனு தர்மம் பற்றி வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள திராணியற்ற இந்து விரோத கும்பல் பிரச்சனையை இதன் மூலம் திசை திருப்புகின்றனர். 


       தமிழகத்தில் நிலவி வரும் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து மத மோதலை உண்டாகி  சட்ட ஒழுங்கை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட முயலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அமைதியை நிலவ செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கோவை மாவட்டம்.


-சீனி,போத்தனூர்.


Comments