இரவில் விபத்துகளை ஏற்படுத்தும் விரிசலான சாலை!!

     -MMH


        தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாம் பயணிக்கும் போது சாலையின் நடுவில் சிறு சிறு விரிசல்கள் உள்ளதை நாம் பார்க்கிறோம் .சில நேரங்களில் அது பெரும் விபத்தாக மாற வாய்ப்புகள் உள்ளது.


       பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் இந்த நிலைமை தான்.அந்த வகையில் பொள்ளாச்சி கிழக்கு வெள்ளாளபாளையம் பகுதியில் ஒரு இடமான இந்த சாலையில் சிறு பள்ளம் போன்று விரிசல் ஏற்பட்டுள்ளது.


       இரவு நேரங்களில் பயணிக்கும் போது விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.சம்பந்த பட்ட அதிகாரிகள் இதை கவனித்து சரி செய்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என அவ்வழியே வரும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments