நிலநடுக்கத்தால் உருக்குலைந்து போன துருக்கி...!

   -MMH


துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 26 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டட இடிபாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கி இருக்கமால் என்றும் அஞ்சப்படுகின்றது. அவர்களை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.



ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், துருக்கியில் மட்டும் அல்லாமல் கிரீஸிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கிரீஸ் நாட்டின் சமோஸ் தீவின் அருகே கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பல்கேரியா, கிரீஸ், வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம். துருக்கியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து.


முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதுவரை 419 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கியில் உள்ள இஸ்மிர் நகரமே உருக்குலைந்து காணப்படுகிறது.


நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து துருக்கி கடலில் சுனாமி அலைகளும் ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடல் நீர் சூழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏகன் நகருக்குள் கடல்நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், சுனாமி சிறிய அளவில் தான் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.


பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து இதுவரை 196 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் போதும், அதற்கு பின்னரும் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.


நாளைய வரலாறு செய்திகளுக்காக


- M.கார்த்திகேயன், சென்னை தண்டையார்பேட்டை.


Comments