மாவட்டந்தோறும் நீட் மையம்!! - ஆசிரியர் சங்கம் எதிர்பார்ப்பு!!

      -MMH


       திருப்பூர்:'நீட்' தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு, தேசிய ஆசிரியர் சங்கத்தினர், நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.வெள்ளகோவிலை சேர்ந்த ராஜவேல்-கனிமொழி தம்பதியின் மகன் ஸ்ரீஜன்.


      'நீட்' தேர்வில் மாநில அளவில் முதலிடம், தேசிய அளவில், 8ம் இடம் பெற் றுள்ளார். அவரை திருப்பூர் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டினர்.


        மாநில கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் தண்டபாணி, துணை தலைவர் குமார், தாராபுரம் மாவட்ட தலைவர் சிவகுமார், செய்தி தொடர்பாளர் ராமகிருஷ்ணன் உள் ளிட்டோர், மாணவன் ஸ்ரீஜனுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினர்.


        ஸ்ரீஜன் கூறுகையில்,''பாடங்களை கூர்ந்து கவனிப்பதன் மூலமும், பயிற்சி மையங்களில், ஆசிரியர்களிடம் விளக்கம் பெறுவதன் மூலமும், போட்டி தேர்வில் சாதிக்க முடியும்,'' என்றார்.ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில்,''கடந்த கல்வியாண்டில், 16 லட்சம் பேர் தேர்வெழுதியில், 8 லட்சம் பேர் வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மாவட்டந்தோறும் பயிற்சி மையம் துவக்கினால், கிராமப்புற மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெறமுடியும்,'' என்றனர்.


நாளையவரலாறு செய்திக்காக,


-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.


Comments