நீட் தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு இன்று தேர்வு!! -நாளை மறுநாள் முடிவுகள்!!

     -MMH


     நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு இன்று மீண்டும் தேர்வு நடத்தபடுகிறது.நீட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு இன்று மறுதேர்வுதேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது.


     கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களால் தேர்வு எழுத முடியாமல் போனது.இதனால், விண்ணப்பித்த சுமார் 15 லட்சத்து 97 ஆயிரம் பேரில், 85 முதல் 95 சதவிதம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் வலியுறுத்தலின் பேரில், தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


-அருண்குமார், கோவை மேற்கு.


Comments