சிவகங்கை அருகே உதவும் இதயங்கள் சார்பாக சாதனை முயற்சி..!

     -MMH


உதவும் இதயங்கள் அறக்கட்டளை' சார்பாக உலக சாதனை முயற்சியாக
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பனைவிதை நடும் விழா!


அதில் ஒன்றாக
சிவகங்கைமாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் மணலூர் ஊராட்சியில் கட்டுக்குடிப்பட்டி மணலிகண்மாயில் 'இயற்கை உறவுகள்' ஒன்றுபட்டு 
3,000/ பனை விதைகள்
விதைக்கும் இரண்டாம் பனை திருவிழா, 'உதவும் இதயங்கள் அறக்கட்டளை' சார்பாக நடைபெற்றது.



நிகழ்ச்சி மணலூர்  ஊராட்சி மன்றத் தலைவர் புகழேந்தி அவர்கள் முன்னிலையில், சிவகங்கை மாவட்ட  1வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பொன்.மணி.பாஸ்கர் தலைமையில்  நடைபெற்றது.மேலும் இந்த உலக சாதனை நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.புதூர் ஒன்றிய தலைவர் விஜயா குமரன் மற்றும் எஸ்.புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் KN.கருப்பு அவர்களும்,  6வது வார்டு கவுன்சிலர் சின்னம்மாள் மென்னன் மற்றும்   சிங்கம்புணரி ஒன்றியம் 9வது  வார்டு கவுன்சிலர் சசி ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் மணலூர்  ஊராட்சி செயலர் கணேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு பனைவிதை நடவு விழாவில் கலந்து கொண்டனர்.
உதவும் இதயங்கள் அறக்கட்டளை சார்பாக மாநிலத் தலைவர், நிறுவனர் ரோகினிவிஜயகுமார்  மற்றும் மாநில ஆலோசகர் செய்தியாளர் சுதாகர் அவர்களும், மாநில திட்ட இயக்குனர் தேவிகா மற்றும் குழு உறுப்பினர்களும் பனைவிதை நடவு விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


-பாரூக் சிவகங்கை.


Comments