கொரோனா தொற்று உறுதிப்படுத்திய பிறகும் திறந்து வைத்த நகை கடைக்கு சீல்!!

     -MMH


  கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகை கடை வீதியில் உள்ள பி.எஸ்.பி நகைக்கடை உரிமையாளருக்கு கொரோனோ நோய்தொற்று உறுதியான நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் கடையைத் திறந்து விற்பனை செய்து வந்துள்ளார்.   இதுகுறித்து சார் ஆட்சியர் வைத்தியநாதன் அவர்களுக்கு புகார் வந்த நிலையில் தாசில்தார் தனிகவேல் சார் ஆட்சியரின் உத்தரவின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு விசாரித்தபோது நோய்த்தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடையை திறந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.  அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்ததால் வருவாய்த்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.


நாளைய  வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments