கோவை அருகே முதியவர் கொடூரமாக அடித்துக் கொலை..!

     -MMH


     கோவை சிங்காநல்லூர் அருகே 83 வயது முதியவர் கொடூரமாக அடித்துக் கொலை, போலீஸார் தீவிர விசாரணை கோவை சிங்கநல்லூர் அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவரை மர்ம நபர்கள் கொடூரமாக அடித்து கொலை செய்து விட்டு அங்கிருந்த காரில் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    கோவை சிங்கநல்லூர் ராஜலட்சுமி மில் அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஸ்ணசாமி. இவரது மனைவி சாரதா. மற்றும் மகன் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மகள் கனடாவில் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது, இதனால் கிருஸ்ணசாமி கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.


    இந்நிலையில் வழக்கமாக கிருஸ்ணசாமி காலையில் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்ததாக தெரிகிறது. அப்போது அவர் உடல் முழுவதும் இரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருதவர்கள் சிங்கநல்லூர் போலீஸுக்கு தகவல் அளித்தனர்,.


    இதையடுத்து அங்கு வந்த போலீஸார் மோப்ப நாய் பிரிவு மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்தனர். முதல் கட்ட விசாரணையில் ரோப்பால் கழுத்து இறுக்கப்பட்டும், கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை செய்த நபர் கிருஸ்ணசாமியின் காரிலேயே தப்பி சென்றதும் தெரியவந்துள்ளது., சம்பவ இடத்தில் கோவை மாநகர துணை ஆணையர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


    ஏற்கனவே கோவை கெம்பட்டி காலணி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கொடூரமாக அடித்து கொலைச்செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,. சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


-சீனிவாசன்,போத்தனூர்.


Comments