இரண்டு ஊராட்சிகளின் உயிர் நீர்!!

     -MMH


       பொள்ளாச்சி கிழக்கு உள்ள காளியாபுரம், வெள்ளளபாளையம் ஊராட்சிகளில் குடிநீர் கிடைத்தாலும் அவை ஒரு சில நேரங்களில் ப்ளீச்சிங்க் பவுடர் அதிகமாக கலந்து வருவதால் நீர் சற்று மந்தம் அடிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு இந்த நீரை கொடுப்பதால் ஒரு சில வாந்தி பேதி வருவதாக மக்கள் கூறுகின்றனர்.இதனால் இரண்டு ஊராட்சிக்கும் நடுவில் உள்ள சொட்டு நீர் பிடிப்பில் நாங்கள் நீரை பிடித்து பயன்படுத்தி வருவதாக இரண்டு ஊராட்சி மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நீரானது எங்களுக்கு தற்போது உயிர் நீராக உள்ளது என மகிழ்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments