தஞ்சை மாவட்டத்தின் கொரோனா நிலவரம்..!

     -MMH


தஞ்சை மாவட்டத்தில் கரோனா நிலவரம்:
தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 88  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 260 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 66 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 334 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 53  வயதுடையஆண் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 217 பேர் பலியாகி உள்ளனர். தீபாவளி நெருங்கிக் கொண்டிருப்பதால் மக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கூடி நிற்கின்றனர் தெருக்களில் நெருக்கடி காணப்படுகிறது, மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது,
 


நாளைய வரலாறு செய்திக்காக


- ராஜசேகரன் தஞ்சாவூர்.


Comments