கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்!!

     -MMH


     கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகள் ஏன்னென்ன? மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கூடுதல் ஆக்ஸிஜன் தேவையில்லை என்பவர்களுக்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் பரிந்துரைக்கப்படவில்லை. மேலும் ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான எச்சரிக்கை அளிக்கப்பட்டுகிறது.


      மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கூடுதல் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால் சுவாச இயந்திரத்தின் வழியாக அல்ல என்றால் ஒரு ஆன்டிவைரல் மருந்து என்னும் ரெமெடிசிவிர் வழங்கப்படுகிறது மற்றும் சில சந்தர்ப்பங்களில் ஸ்டீராய்டு வழங்கப்படுகிறது.


     மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மற்றும் சுவாச இயந்திரத்தின் மூலம் சுவாசிக்கப்பட்டால் ரெம்டெசிவிர் மற்றும் ஒரு ஸ்டீராய்டு வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, வைரஸை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை கொண்டவர்களின்


     பிளாஸ்மாவை மற்ற நோயாளிகளுக்கு செலுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


     அதற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பரிந்துரைக்க போதுமானதாக வழிகாட்டுதல்கள் இல்லை. இருப்பினும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் சில மருந்துகளுக்கு எதிராக அறிவுறுத்துவதற்கு போதுமானது என்றும் பல ஆய்வுகள் அவை கொரோனா வைரஸுக்கு எதிராக பயனற்றவை என்று கண்டறிந்துள்ளன. மேலும் மருந்துகளைத் தவிர, தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக சுவாச இயந்திரங்களின் தேவையை கட்டுப்படுத்தக்கூடிய பிற வழிகளைப் பற்றி மருத்துவர்கள் அதிகம் கற்றுக் கொண்டனர்.


     பொதுவாக வைரஸுக்கான சிகிச்சைகளில் பல வகை உள்ளன. ஆகையால் ஒருவர் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைப் பொறுத்து அதற்கேற்ப சிகிச்சை அளிப்பதே சிறந்ததாகும். உதாரணமாக, டெக்ஸாமெதாசோன் போன்ற ஸ்டெராய்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இறக்கும் அபாயத்தைக் குறைக்கும். ஆனால் லேசான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த தீர்வாக இருக்காது.


     அமெரிக்காவில், கொரோனா வைரஸுக்கு இதுவரை எந்தவொரு குறிப்பிடத்தக்க சிகிச்சையும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் ஒரு சில அவசரகால சிகிச்சைகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிய ஆய்வுகள் வெளிவருகையில் தேசிய சுகாதார நிறுவனங்களில் உள்ள நிபுணர்களின் குழு வழிகாட்டுதல்களை புதுப்பித்து வெளியிடுகிறது.


-சுரேந்தர்,கோவை கிழக்கு.


Comments