சீரான இரத்த ஓட்டத்துக்கு 'சிக்' கான செருப்பு!அட! சுவாரஸ்யமாய் ஒரு செருப்புக்கதை!!

     -MMH


    அர்மேனியாவில் உள்ள ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்ட 5600 ஆண்டுகள் பழமையான காலணி!!


     கோபம் வரும் போது "செருப்பு பிஞ்சுரும்"னு இனிமேல் யாரும் சொல்லாதீங்க. செருப்பு பிஞ்சு போகாம பாத்துட்டா இரத்த ஓட்டம் சீராகுமாம்.கால்களில் செருப்பு அணிவதால், எப்படி பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகமாகும்? பார்ப்பதற்கு முன் காலணி தோன்றிய வரவாற்றைக் கொஞ்சம் பார்க்கலாமா!


     சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரீக வளர்ச்சியை எட்டாத மனிதர்கள் செருப்பு அணிந்து காடுகளில் அலைந்து திரிந்துள்ளனர். அமெரிக்காவில் போர்ட்ராக்கேவ் என்ற பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகள்தான் உலகில் முதன் முதலில் செருப்பை அணிந்துகொண்ட பெருமைக்கு உரியவர்கள்.


     இவர்கள் தாவரம் மற்றும் மரங்களின் இலை-தழைகளை மொத்தமாக கோர்த்து, அதை செருப்பு போன்று அணிந்துள்ளனர். அதன்பிறகுதான், பூமியின் பிற பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் செருப்பின் அவசியத்தை உணர்ந்து, அதை உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.


     காலபோக்கில் இலை-தழைகளுக்கு பதிலாக மரம், விலங்குகளின் எலும்புகள் போன்றவற்றை பயன்படுத்தியும் செருப்புகள் உருவாக்கிக்கொண்டார்கள். சில நுறு ஆண்டுகளுக்கு முன்புதான் நாகரீக செருப்புகள் உருவாக்கபட்டு, பயன்பாட்டுக்கு வந்தன.


     பொதுவாக நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி, தியானம், யோகா மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மேற்கொள்ளுங்கள் என்பார்கள். ஆனால் இனி மேல் அதனுடன் காலில் செருப்பு போடுவதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறது ஆய்வு. 


     ஆமாங்க நாம் காலில் செருப்பு போட்டு நடப்பதால் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கிறதாம்.இதுவரை வித விதமான மாடல்களில் அழகுக்காக காலணிகளை அணிந்து இருப்போம். ஆனால் உண்மையில் காலணிகள் நம் உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலணிகள் போட்டு நடப்பதால் நம் முழங்கால், முதுகு இவைகளை நேராக்கி நம் உடல் அமைப்பிற்கு நல்ல தோரணையை கொடுக்கிறது. மேலும் கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து உங்க கால்கள் நாள் முழுவதும் சோர்ந்து போகாமல் இருக்க உதவுகிறது.



முதலைத்தோல் சப்பாத்து(ஷூ)


கால்களும்.. செருப்பும்..


     கால்கள் தான் நம் உடலின் ஆணிவேர், அடித்தளம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பாதங்களை பாதுகாப்பது நமது கடமை. அந்த வேலையைத் தான் நாம் அணியும் செருப்புகள் செய்கின்றன. நம்முடைய பாதங்கள் முதுகு, இடுப்பு, முழங்கால் என்று எல்லாவற்றையும் இணைக்கிறது. எனவே பாதங்கள் சரியாக இல்லாவிட்டால் உங்களுக்கு முழங்கால் மற்றும் முதுகு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.


பழங்காலத்தில் செருப்பு இருந்ததா?


     பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்த செருப்புகள் என்று எதுவும் கிடையாது. அவர்கள் புல்வெளித் தரைகளில், ஏன் காடுகளில் கூட வெறுங்காலில் நடந்தனர்.   அப்பொழுது இயற்கையாகவே பாதங்களில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டன. இதனால் அவர்களுக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டம் அதிகரித்து, கால்களின் நிலையான மற்றும் மாறும் செயல்பாடுகளைச் செய்ய முடிந்தது.


     ஆனால் இன்றைய நாகரீக விஞ்ஞான  உலகில் அந்தக் காலத்தில் நடந்தது மாதிரி தரையில் வெறுங்காலுடன் நடக்க முடிவதில்லை. அன்று நாள்தோறும் வெறும் காலில்  சராசரியாக 8000 படிகள் வரை ஏற முடிந்தது போல் இன்று முடிவதில்லை. அதனால் தான் இன்றைய மக்கள் கட்டாய காலணி பழக்கத்திற்கு மாறினார்கள். 


     காலணி அணிந்து நடந்தால் நரம்புகள் தூண்டப்பட்டு இரத்த ஓட்டம் சீராகுமாம். ஆனால் தவறான காலணிகள் ஒருபோதும் பலன் தராது. சரியான காலணிகளைத்  தேர்ந்தெடுத்து அணிந்தால் மட்டுமே உங்களால் நரம்புத் தூண்டல்களைப் பாதங்களில் பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.


     இதற்காக எலும்பியல், சிரோதெரபி, விளையாட்டு மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான பிரபல ஜெர்மன் மருத்துவர் டாக்டர் மெட் வால்டர் பாத நரம்புகளின் ரிஃப்ளெக்சாலஜி அறிவியலின் அடிப்படையில் 5 அம்சங்களைக் கொண்ட காலணிகளை உருவாக்கியுள்ளார்.


அவ்வம்சங்கள்,நடப்பதற்கு முன்பு ஒவ்வொரு நாளும் உங்கள் கால்களுக்கு நன்றாக மசாஜ் செய்யப்பட வேண்டும். 
இப்படி செய்யும் போது பாத நரம்புகள் தூண்டப்படும். 
இதன் மூலம் பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து தேவையான உயிர்வளி  கிடைக்கும். இதற்கு பெயர் தான் ரிஃப்ளெக்ஸ் செயல்பாடு. இதன் மூலம் உங்க பாத தசைகளில் ஏற்படும் பதட்டத்தைத்  தணித்து, கால் மற்றும் உடல் நிலையை சரிசெய்யப்படும் .கடின பரப்புகளில் நடக்கும் போது கூட பாதங்கள் கஷ்டப்படுவதில்லை. கால்களுக்கு இயற்கை நெகிழ்வுத்தன்மை மற்றும் சரியான ஆதரவைக் கொடுக்கும்.


     நீங்கள் உங்கள் பாதங்களுக்கு சரியான காலணியைத் தேர்ந்தெடுத்திருந்தால் 12 மணிநேரம் கூடுதலாக நின்று நடைபயிற்சி செய்ய கால்களை அது ஊக்குவிக்கிறது. மேலும் காலணிகள் காலுக்கு வலிமையை கொடுத்து உடற்பயிற்சி செய்ய ஆதரவு தருகிறது. கால், முழங்கால் மற்றும் முதுகு வலி ஆகியவற்றை நீக்குகிறது மூட்டுகள் மற்றும் தசைகளைப் பாதுகாக்கிறது.கால்களின் நிலை மற்றும் உடல் தோரணையைச் சரிசெய்கிறது. ஆனால் இதற்கெல்லாம் காலுக்குச் சரியான காலணி மிக அவசியம்.


     எனவே உங்கள்  பாத சிக்கல்களைப் போக்க நீங்கள் இனி ஆரோக்கியமான காலணிகளை தேர்ந்தெடுத்தாலே போதும். ஆரோக்கியமான பாதணிகள் கால்களுக்கு தேவையான நரம்பு தூண்டுதல்களையும், ஆதரவையும் கொடுக்கிறது. எனவே தான் மருத்துவர்கள் காலணிகளை பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.


-Ln. இந்திராதேவி முருகேசன்,சோலை.


Comments