இந்த ஆண்டில் நீட் தேர்வில் கட்ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்க வாய்ப்பு!!

     -MMH 


 மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஏராளமான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று உள்ளதால் கலந்தாய்வுக்கான கட்ஆப் மதிப்பெண்கள் கணிசமாக அதிகரிக்கபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.


 மொத்த மதிப்பெண்கள் கொண்ட நீட் தேர்வில் இந்த ஆண்டு 500-க்கும் மேல் எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகம். அதாவது கடந்த ஆண்டு 1329 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 5240 ஆகும். அதே போல 600-ற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட பத்து மடங்கு அதிகரித்துள்ளது.


 இதனால் கட்ஆப் மதிப்பெண்கள் 70 முதல் 100 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் இதர பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண் 520-ஆக இருந்தது. பிற்படுத்தப்பட்டோருக்கு 470 மதிப்பெண்களும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 458 மதிப்பெண்களாகவும். பட்டியல் பிரிவினருக்கு 360 மதிப்பெண்களாகவும் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டது.


 இந்த நிலையில் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற போதிலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அவர்களுக்கு 300 எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் கிடைக்கும். இதனால் பிற மாணவர்களுக்கான இடங்கள் குறையும் என்பதால் கட் ஆப் மதிப்பெண்கள் கணிசமான முறையில் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கிறது.


-ஸ்டார் வெங்கட்.


 


Comments