பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி!!

     -MMH


      பொள்ளாச்சி அடுத்த வால்பாறையில் பனி மூட்டம் நிலவுவதால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.மேலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மிகவும் மெதுவாக செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சில இடங்களில் வாகனத்தை இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


       மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. கீழே இருந்து வால்பாறை செல்வோருக்கும்,மேலே இருந்து கீழே வருவோருக்கும் மிகுந்த சவாலாகவே இன்றைய நாள் உள்ளது என்று குறிப்பிடலாம்.மிகவும் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் கனிவுடன்  கூறிவருகின்றனர்.


நாளை வரலாறு செய்திக்காக,


M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.


Comments