கிராம உதவியாளர்கள் பணியிடம் விண்ணப்பிக்க சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு!

    -MMH


சிங்கம்புணரி தாலுகாவில் கிராம உதவியாளர்கள் பணியிடம். விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு.


சிவகங்கை மாவட்டத்தில் 60 கிராம உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.


கிராம உதவியாளர் பதவிக்கு ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2020 அன்று குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொதுப்பிரிவினர் என்றால் 30 வயது என்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வயதுவரம்பு 35 வயது வரை என்றும் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் வயது வரம்பு 35 வயது. ஆதிதிராவிடர்களுக்கு வயது வரம்பு 35 வயது விண்ணப்பிக்கத் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சிங்கம்புணரி தாலுகாவில் கிருங்காக்கோட்டை, கரிசல்பட்டி, ஏரியூர், முசுண்டபட்டி, ஏ.மேலையூர், காயாம்பட்டி, மேலப்பட்டி மற்றும் டி.காளாப்பூர் ஆகிய 8 ஊர்களில் சிங்கம்புணரி தாலுகாவில் கிராம உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப மனு வருகிற 20.11.2020 பிற்பகல் 5 மணி வரை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


மேலும் மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில் அல்லது வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர். மிதிவண்டி ஓட்டுபவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர், விண்ணப்த்தில் சமீபத்திய புகைப்படம் ஒட்டி, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.


-பாரூக் சிவகங்கை.


Comments