சாலை விரிவாக்க திட்டப் பணி மின்கம்பங்கள் மாற்றியமைப்பு ..!!

     -MMH


     பொள்ளாச்சியில், சாலை விரிவாக்க திட்டப் பணிக்காக, மின்கம்பங்கள்,டிரான்ஸ்பார்மர்கள்இடமாற்றம்செய்யப்படுகின்றன.பொள்ளாச்சியில், உடுமலை ரோடு, பாலக்காடு ரோடு மற்றும் கோவை ரோடுகளில், 2.8 கி.மீ., தொலைவுக்கு விரிவாக்க பணி நடக்கிறது.


     முக்கிய சந்திப்புகள் விரிவுபடுத்தப்படுகின்றன. இப்பகுதிகளில், தற்போதுள்ள ரோடு, 18 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது. மேலும், சாக்கடை வசதியுடன், 22 மீட்டர் அகலத்தில் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.தேர்நிலையம் சிக்னல், பெரிய பள்ளி வாசல் சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட் சந்திப்பு, ஸ்டேட் பாங்க் சந்திப்புகள் அகலப்படுத்தி, மேம்படுத்தப்படுகின்றன.இத்திட்டத்தில், ரோடு, சிறு பாலங்கள், குடிநீர் குழாய்கள், மின்கம்பங்கள் மாற்றி அமைத்தல், வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, 34. 51 கோடி ரூபாய்; நிலம் கையகப்படுத்தலுக்கு, 33 கோடி ரூபாய் என, 67.51 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் பணி நடக்கிறது.விரிவுபடுத்தப்படும் பகுதியில் உள்ள மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை இடம் மாற்றும் பணியை மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.


    மொத்தம், 14 டிரான்ஸ்பார்மர்கள், 150க்கும்மேற்பட்ட மின்கம்பங்கள் இடம் மாற்றப்படுகின்றன.இதற்காக, அந்தந்த பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தி, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைந்து பணிகளை முடிக்கும் நோக்கில் கூடுதல் ஆட்கள், தேவையான தளவாடங்களுடன் பணியை துவங்கியுள்ளதாக, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments