இந்தியாவில் சிறப்பான ஆட்சி செய்யும் மாநிலங்கள்!! - பட்டியல் வெளியீடு!!

     -MMH


 இந்தியாவிலேயே சிறப்பாக ஆட்சி செய்யப்படும் மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தை கேரளமும், இரண்டாம் இடத்தை தமிழகமும் பிடித்துள்ளன. நாட்டிலேயே மிக மோசமான ஆட்சி நடைபெறும் மாநிலமாக உத்தரப் பிரதேசத்துக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.


 இந்தியாவில் சிறப்பாக ஆட்சி செய்யும் மாநிலங்களை மதிப்பிட்டு பெங்களூருவில் உள்ள பொது விவகார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் இந்த மையம் இயங்கி வருகிறது.


 இந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களில் தென் மாநிலங்களான கேரளம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் ஆகியவை இருக்கின்றன. முதல் இடத்தில் கேரளமும் (1.388 புள்ளிகள்), இரண்டாம் இடத்தில் தமிழகமும் (0.912 புள்ளிகள்), மூன்றாம் இடத்தில் ஆந்திரமும் (0.531 புள்ளிகள்), நான்காம் இடத்தில் கர்நாடகமும் (0.468 புள்ளிகள்) இருக்கின்றன.


 மிக மோசமாக ஆட்சி நடைபெறும் மாநிலங்களாக கடைசி இடங்களில் உத்தரப் பிரதேசம் (1.461), ஒடிசா (1.201), பிஹார் (1.158) ஆகியவை இருக்கின்றன. சிறு மாநிலங்களை பொறுத்தவரை சிறப்பாக ஆட்சி செய்யும் மாநிலங்களாக முதலிடத்தில் கோவா (1.745), மேகாலயா (0.797), இமாசலப் பிரதேசம் (0.725) ஆகியவை இருக்கின்றன.


 சிறப்பாக ஆட்சி நடைபெறும் யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் (1.05) முதலிடத்திலும், புதுச்சேரி (0.52) இரண்டாம் இடத்திலும், லட்சத்தீவு (0.003) மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. வளர்ச்சி, சமத்துவம், நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.


-ஸ்டார் வெங்கட்.


Comments