திடக்கழிவு மேலாண்மையில் சாதனை..!

   -MMH


திடக்கழிவு மேலாண்மையில், எவ்வித பொருளும் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், புதிய ‘மேக் கிரீன் இன்சினரேட்டர்’ உருவாக்கிய மேக் இன்டியா லிமிடெட் நிறுவனம், கெவின்கேர் எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் புதுமைப்படைப்பு விருது 2020’ விருதை வென்றுள்ளது.


கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில்  மேக் இன்டியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் இன்ஜினியர் அத்தப்ப கவுண்டர், தலைமை விஞ்ஞானி டாக்டர் ராமன் சிவக்குமார், ஆகியோரின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.அப்போது பேசிய அவர்கள் கெவின்கேர் எம்எம்ஏ  சின்னிகிருஷ்ணன் புதுமைபடைப்பு விருது 2020"  என்ற  போட்டி வருடாவருடம் நடைபெற்று வருகின்றதாகவும், தற்பொது, நடைபெற்ற 9வது பதிப்புக்கான போட்டியில், அகில இந்திய அளவில் பல்வேறு புதிய, புதுமை, கண்டுபிடிப்புகளை காட்சி படுத்தியதாகவும், இதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மைக்கான புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி அதனை காட்சிப்படுத்தியதற்காகவும்,


அதன் சோதனை முயற்சியில் வெற்றியை கண்டதாலும், மேக் இந்தியா லிமிடெட் சார்பில் காட்சிபடுத்த பட்ட, "மேக் கிரீன் இன்சினரேட்டர்" என்ற இயந்திரத்தை  உருவாக்கிய மேக் இந்தியா லிமிடெட் நிறுவனத்திறக்கு,  கிர்லாஸ்கர் குழுமத்தின் தலைவர் அஜய் கிர்லாஸ்கர்  "சின்னிகிருஷ்ணன் புதுமை படைப்புகான 2020" என்ற  விருதை இந்த ஆண்டு  வழங்கி உள்ளதாகவும்   தெரிவித்தார்.


மேலும் இன்றைய உலகில், மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை  ஒழிக்க பல்வேறு முயற்சிகளை நாம்  மேற்கொண்டு வருகின்ற வேலையில், பிளாஸ்டிக்கை தீயிட்டு அளிப்பதை தவிர வேறுவழியில்லாத நிலையை மாற்றி, இதறக்கு புதிய தீர்வை கண்டு பிடித்து உள்ளதாகவும், இனி பிளாஸ்டிகை இயற்கை உரமாக மாற்றி, அந்த உரத்தில்  விவசாயங்களுக்கு பயண்படுத்த முடியும், எனவும், இதிலிருந்து கிடைக்கும் சாம்பலை கொண்டு நடைபாதை கற்களை உருவாக்கியுள்ளதாகவும், இந்த முறையினால் அளிக்க படுகின்ற பிளாஸ்டிக் குப்பை கழிவுகளின் மூலமாக பொதுமக்களுக்கு எந்த வித புகை, பாதிப்பு ஏற்படாது எனவும், இதனை புதிதாக தயாரித்து சாதனை படைத்துள்ளதாக  மேக் இந்தியா நிறுவனத்தின் தலைமை இஞ்சினியர் ராமன் சிவக்குமார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


-சீனி போத்தனூர்.


Comments