ஆதார் எண்களை வைத்து வங்கி கணக்கை முடக்க முடியுமா..!

     -MMH


   ஒருவரின் ஆதார் எண்களை வைத்து அவரது வங்கிக் கணக்கை எவ்வித முறையிலும் ஹேக் செய்ய முடியாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. இது தொடர்பான மக்களின் குழப்பத்தை நீக்க, ஆதார் சார்பில் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.


  ஒருவரது ஆதார் எண் அல்லது அதன் தகவல்களைப் பெறுவதன் மூலம், யாரும் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. மேலும் இதனை செய்ய OTP, டெபிட் கார்டு, PIN, OTP போன்ற பல வகையான தகவல்கள் தேவை என தெளிவுபடுத்தி உள்ளது.


  UIDAI விளக்கம்:ஒரு இந்திய குடிமகனிடம் இருக்க வேண்டிய முக்கிய அடையாளமாக ஆதார் மாறிவிட்டது.
ஆம், வங்கிக்கணக்கு, ரேஷன் கார்டு உட்பட அனைத்து வித அத்தியாவசிய சேவைகளுடனும் கட்டாயம் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும்.


 விபரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஆதார் பாதுகாப்பில் மத்திய அரசு அதிக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆதார் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களுக்கு UIDAI சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.


 அதில் என்னுடைய ஆதார் எண்ணைத் தெரிந்து கொண்டால் யாராவது எனது வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதற்கு விளக்கம் அளித்த UIDAI, இது முற்றிலும் தவறானது.


 உங்கள் ஏடிஎம் கார்டு எண்ணை அறிந்து கொள்வதன் மூலம், ஏடிஎம் இயந்திரத்திலிருந்து யாரும் பணத்தை எடுக்க முடியாது. அதுபோல தான் உங்கள் ஆதார் எண்ணை மட்டும் தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் வங்கிக் கணக்கை யாரும் ஹேக் செய்து பணத்தை எடுக்க முடியாது என கூறியுள்ளது.


  வங்கிகளால் வழங்கப்பட்ட PIN / OTP போன்றவற்றை முறையாக பயன்படுத்தினால் வங்கிக்கணக்கு பாதுகாப்பாக இருக்கும். மேலும் இதுவரை ஆதார் காரணமாக ஒருவருக்கு கூட நிதி இழப்பு ஏற்பட்டதில்லை. ஆதார் எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு வங்கி அல்லது வேறு எந்த சேவைக்கும் பயன்படுத்த முடியாது.


-ஸ்டார் வெங்கட்.


Comments