கோவையில் புதிதாக மனுக்கள் மேளா!!

     -MMH


      கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் காவல் துறை சார்பில் 
மனுக்கள் மேளா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.


      இந்நிகழ்ச்சியை கோவை டி ஐ ஜி நரேந்திரன் நாயர் தொடங்கி வைத்தார்.டிஜஜி பேசுகையில் காவல்துறை உங்கள் நண்பன் மக்கள் பயப்படாமல் தைரியமாக காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்கலாம்.மேலும் புகார் மனுக்கள் பெற்ற உடனே மக்களை அலையவிடாமல் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


        நிலப் பிரச்சனை, குடும்ப பிரச்சனை,சமரசம் ஆகக்கூடிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வாரத்தில் ஒரு நாள் மனுக்கள் மேளா நடத்தப்படும்.மக்கள் அச்சப்படாமல் புகார் அளிக்கலாம் இதுவரை 25 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது.
காவல்துறை உங்கள் நண்பன் அச்சப்பட வேண்டாம் பயப்பட வேண்டாம் என தெரிவித்தார். 


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments