நாளை வானில் தெரியும் ப்ளூ மூன்!!

     -MMH


        ஒரே மாதத்தில் இரண்டாம் முறை தோன்றும் பவுர்ணமி நிலவான, 'ப்ளூ மூன்' நாளை வானில் காணலாம்.இந்த அதிசய நிகழ்வு வானில் நாளை இரவு, 8.19 மணியளவில் இருந்து பார்க்கலாம். இந்த மாதத்தின் முதல் பவுர்ணமி அக்., 1 மற்றும் 2ம் தேதிகளில் ஏற்பட்டது.


      கோவை அறிவியல் மண்டல மாவட்ட அறிவியல் அலுவலர் பழனிசாமி கூறியதாவது:


       பொதுவாக ஒரு லுானார் மாதம் என்பது, 29 நாட்கள், 12 மணி நேரம், 44 நிமிடங்கள், 33 நொடி கொண்டது. இது மாதத்தின் முதல் அல்லது 2ம் தேதிகளில் தோன்றலாம். பிப்., மாதம் மொத்தமே, 28 நாட்களே இருக்கும் காரணத்தால் இதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. சில நேரங்களில், 31ம் தேதி கொண்ட மாதங்களில் இதுபோன்று இரட்டை பவுர்ணமிகள் தோன்றும்.


கடந்த, 2007ம் ஆண்டு ஜூலை, 30ல் இதுபோன்று, 'ப்ளூ மூன்' நிகழ்வு ஏற்பட்டது.இனி வரும், 2050ம் ஆண்டு செப்., 30ல் இந்நிகழ்வு நடக்கும். பொதுவாக ஆண்டுக்கு, 12 பவுர்ணமிகளே தோன்றும் நிலையில், எப்போதெல்லாம், 'ப்ளூ மூன்' நிகழ்வு ஏற்படுகிறதோ, அந்தாண்டு மொத்தம், 13 பவுர்ணமிகள் தோன்றும்.இவ்வாறு, அவர் கூறினார்.


-கிரி,கோவை மாவட்டம்.


Comments