தொழிலதிபர் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொல!! - உருக்கமான தகவல்கள்!!

     -MMH


     தாராபுரம் தொழிலதிபர் திருப்பூரில் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை? - உருக்கமான தகவல்கள்


     தாராபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன் மனைவியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


     திருப்பூரையடுத்த வஞ்சிபாளையம் ரெயில் நிலையம் அருகே தண்டாவளத்தில் வயதான ஆணும் பெண்ணும் பலியாகி கிடந்தார்கள். சம்பவ இடத்துக்கு சென்ற ரெயில்வே போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரித்தனர். ரயில் தண்டாவளம் அருகே கார் ஒன்றும் கேட்பாரற்று நின்றது.


     விசாரணையில் இறந்தவர்கள் தாராபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தங்கமுத்து மற்றும் அவரின் மனைவி ராதாமணி என்பது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் தங்கமுத்துவின் மகன் மதன்குமார் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். உறவினர்கள் வீட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் , ரயில் அடிபட்டு இறந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


     இறந்து போன தங்கமுத்து தொழிலதிபர் ஆவார். தாராபுரத்தில் அவருக்கு சொந்தமாக வணிக வளாகங்களும் உள்ளன. தங்கமுத்து தம்பதிக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகளுக்கு பின்னரே மதன்குமார் பிறந்துள்ளார். இதனால், மகனை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்துள்ளனர். தற்போது, 24 வயதாக மதன்குமார் வெளிநாட்டுக்கு சென்று படிக்க போவதாக தந்தையிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், தங்கமுத்து தன் மகனை வெளிநாடு அனுப்ப மறுத்துள்ளார்.


     இது தொடர்பாக . தந்தைக்கும் மகனுக்கு பிரச்னை இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், அந்த மன வேதனையில் கணவன் , மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனரா என்கிற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. வஞ்சிப்பாளையம் ரயில் தண்டாவளம் அருகே நின்று கணவன் மனைவி இருவரும் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாகவும். அந்த சமயத்தில் கோவையில் இருந்த திருப்பூர் நோக்கி சென்ற ரயிலில் திடீரென்று பாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.


-சோலை, சேலம்.


Comments