பொள்ளாச்சி அருகே வளர்ந்தாயமரத்தை வெட்டிய பிறகும் தொடரும் சிக்கல்கள்!!

 


     -MMH


     பொள்ளாச்சி மீன்கரை சாலையில் உள்ள வளர்ந்தாயமரம்  என்ற பகுதியில் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்த 150 வருட பழமையான புகழ்பெற்ற ஆயமரத்தை கடந்த 14-ம் தேதி வெட்டினார்கள்.இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள் இந்த செய்தியை கடந்த 15-ம் தேதி நாம் வெளியிட்டிருந்தோம்.



     இந்நிலையில் மரம்வெட்டி 5 நாட்களுக்கு மேல் ஆகியும் மரத்தை அப்புறப்படுத்தாமல் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக ரோட்டிலே கிடக்கிறது. மேலும் இப்பகுதியில் ஆர்டிஓ செக்போஸ்ட் உள்ளது சரக்கு வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் ஆர்டிஓ செக்போஸ்ட் செல்வதற்கு மிகவும் இடையூறாகவும் தொந்தரவாக இருப்பதால் வெட்டிய மரத்தை அப்புறப்படுத்தி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என இப்பகுதியில் உள்ள பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.


     சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா ...?என்ற கேள்வியோடு,


நாளைய வரலாறு செய்திக்காக, 


-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.


Comments