எதிர்ப்பு சத்து மாத்திரைகளை சபாநாயகர் வழங்கினார்!!

       -MMH


     பொள்ளாச்சி அடுத்த பெரிய நெகமம் துவக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார்.


     இந்நிகழ்ச்சியில் தாசில்தார் தணிகைவேல், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் செல்வராஜா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராதாமணி, நெகமம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சோமசுந்தரம், முன்னாள் துணைத் தலைவர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சி அமைச்சர் எஸ் பி வேலுமணி ஏற்பாட்டில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments