வாலிபரின் தற்கொலையில் சந்தேகம்!! - சாலை மாறியலால் பரபரப்பு!!

     -MMH 


     பொள்ளாச்சி: நெகமம் அடுத்த சக்கரபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி இவருடைய மகன் சிலம்பரசன் இவர் அதே பகுதியை சேர்ந்த மீனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் மீனாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. பலமுறை  கணவன் கண்டித்தும் கள்ளக்காதல் தொடர்ந்து இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் மன உளைச்சலால்  சிலம்பரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.      உடலை கைப்பற்றிய நெகமம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கூடிய மனைவி மீனாவும் உறவினர்களும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.      சிலம்பரசன்  இறப்பில் சந்தேகம் இருப்பதாக வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் சமரசம் செய்தனர்  அப்பொழுது உறவினர்கள் அருண்குமாரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரி தெரிவித்த நிலையில் சாலை மறியல் கைவிடப்பட்டது. ஆனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்.


Comments