ரோட்டோரத்தில் குப்பை எரிப்பு ஊராட்சி நடவடிக்கை எடுக்குமா..!

     -MMH


உடுமலை ஒன்றியத்தில் நக ைரயொட்டியுள்ள மக்கள் தொகை அதிகம் கொண்ட ஊராட்சிகளில் கணக்கம்பாளையம் முதன்மையானது. இந்த ஊராட்சியில், குடியிருப்புகள் அதிகமுள்ளதால், அதற்கேற்ப சுகாதார நடவடிக்கைகளையும், அதிகரிக்க வேண்டும்.


குப்பைக்கழிவுகளை வீடுகள் தோறும் சேகரித்து, கழிவிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பதற்கென திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.


இப்பணிகளை மேற்கொள்ள, கழிவுகளை வீடுகள் தோறும் சேகரிக்க, துாய்மைக்காவலர்களும் நியமிக்கப்படுகின்றனர்.இந்த ஊராட்சியில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பில் இல்லாத காலத்தில், சுகாதார சீர்கேடு தீராத பிரச்னையாக தொடர்ந்தது.


தற்போது, சில பகுதிகளில், உள்ளாட்சி பிரதிநிதிகள் கவனம் கொண்டு கழிவுகளை முறையாக சேகரிப்பதற்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், இவ்வாறு சேகரிக்கப்படும் கழிவுகள் உரமாக்குவதற்கு பயன்படுத்தப்படுவதில்லை. ரோட்டோரத்தில் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.


இதனால், அப்பகுதியை மாசடைய செய்வதோடு, மக்களுக்கும் சுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கும் முக்கியத்துவம் இல்லாமல் உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இப்பிரச்னைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


நாளையவரலாறு செய்திக்காக 


-முஹம்மது ஹனீப் திருப்பூர்.


Comments