முகம் பொலிவு பெற வேண்டுமா... இதை செய்யலாமே..!!

     -MMH


 முகப்பொலிவு என்பது தான் நாம் சந்திக்கும் ஒருவரை நம்மிடம் அதிகம் பேசவைக்கும் ஒரு கருவி. அப்படிப்பட்ட முகத்தை கொஞ்சம் சிரமத்தை எடுத்து பராமரிப்பதன் மூலம்  உங்கள் தோற்றப்பொலிவை கூட்டும். 


 முகத்திலிருக்கும் சுருக்கத்தை மாற்ற, ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயில், ஒரு முட்டையை அடித்து கலக்குங்கள். இந்தக் கூழை முகத்திலும் கழுத்திலும் பூசுங்கள். நன்றாக காய்ந்து சருமத்தை இறுக்கும்போது சுடுநீரில் சோடா பை - கார்பனேட் கலந்து அதில் பஞ்சை முக்கி முகத்தையும் கழுத்தையும் துடைத்து சுத்தம் செய்யுங்கள். 


    ஒரு மேஜைக்கரண்டி கடலைமாவுடன்,ஆரஞ்சு பழத் தோலை காய வைத்து தூளாக்கி கால் தேக்கரண்டி, தயிர் ஒரு மேசைக்கரண்டி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளோடு ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை முகத்திலும் கழுத்திலும் பூசுங்கள். அது ஊற தொடங்கி சருமத்தை இறுக்கும் போது தண்ணீரில் விரலை முக்கி, சருமத்தை மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.


  முதலில் லேசான சூடு நீரிலும் பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி சுத்தம் செய்து உலர்ந்த துணியால் தண்ணீரை ஒற்றி எடுங்கள். உங்கள் முகம் மினுமினுக்கும்.


-ஸ்டார் வெங்கட்.


Comments