உத்தரப்பிரதேச மக்கள் 1 கோடி பேர் மின்கட்டணம் செலுத்தாதது அம்பலம் – ரூ. 68000 கோடி இழப்பு!!

 

  -MMH 

     மின்கட்டணம் செலுத்தாத மக்களை கண்டறிய உத்திரப்பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 உறுப்பினர்களைக் கொண்ட குழுக்கள் தீவிரமாக களமிறங்கி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதுவரை 1.09 கோடி மக்கள் தங்கள் மின் கட்டணங்களை கட்டவில்லை என்ற அதிர்ச்சி தகவலை அம்மாநில எரிசக்தி துறையின் தலைமை செயலாளர் அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 96% பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களிடமிருந்து சுமார் 68 ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கக்கூடிய தொகை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள பூர்வஞ்சல், தட்சிணாஞ்சல் ஆகிய மண்டலங்களில் அதிகளவிலான மக்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை. இவ்வாறு பாக்கி வைத்திருப்பவர்கள் போலியான மின் இணைப்பை பெற்றிருக்கலாம் என்றும், அவர்களை கண்டுபிடித்து மீட்பது என்பது தங்களுக்கு சவாலான செயல் என்றும் அரவிந்த்குமார் கூறியுள்ளார்.

மேலும் மக்கள் பணம் செலுத்தாவிட்டால், வெளிமார்க்கெட்டில் மின்சாரம் வாங்குவதற்கு எங்களுக்கு போதுமான நிதி இருக்காது என்றும், இதன்மூலம் நுகர்வோருக்கு தேவையான மின்சாரத்தை அவர்கள் பெற முடியாது எனவும் கவலை தெரிவித்துள்ளார். மக்கள் மின்கட்டணம் செலுத்துவதில் அரசு பல்வேறு சலுகைகளை அளித்தாலும் நிலைமை மோசமாக உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஃபாரூக்,சிவகங்கை.

Comments