ரூ 1,85,000 தில் சின்டெக்ஸ் டேங்க்!! - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!

     -MMH

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில்  வெள்ளாளபாளையம் அடுத்த தொப்பம்பட்டியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை 2018-19 நிதியில் 14-வது மானியக்குழுவில் பெறப்பட்ட நிதியினை கொண்டு  மக்கள் பயன்பாட்டிற்காக தொப்பம்பட்டி விநாயகர் கோவில் தெருவில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு சின்டெக்ஸ் டேங்க் மற்றும் இரண்டு பிளாஸ்டிக் குழாய்கள் அமைக்கப்பட்டு மதிப்பீட்டு தொகையை எழுதிவைத்துள்ளனர்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதன் மதிப்பு 15 ஆயிரம் ரூபாய் என்பது அதிகம் ஆனால் 1,85,000 ரூபாய்  செலவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்   வெள்ளாளபாளையம் கிராம ஊராட்சி நிர்வாகம் சார்பாக சமூக இடைவெளியுடன் கூட்டம் நடத்தி வார்டு  உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ்குமார்கோவை தெற்கு.

Comments