கோவையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பிரிண்ட் செய்த டிசைனர் கைது..!
-MMH
கொரோனா ஊரடங்காலும் , வருமானம் இல்லாத காரணத்தால் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பிரிண்ட் செய்த வெப் டிசைனர் இருவர் கைது - காதல் ஜோடிக்கு உதவியதால் சிக்கிய வாலிபர்கள்.
கோவையில் 7.5 இலட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் சிக்கிய விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டடை மாவட்டத்தை சேர்ந்த காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவை சேரன்மாநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நண்பர்களுடன் தங்கியுள்ளார். இந்நிலையில் பெண் வீட்டார் தங்களது மகளை காணவில்லை என புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கோவை சேரன் மாநகரில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் , பீளமேடு காவல் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் , குறிப்பட்ட வீட்டிற்கு பீளமேடு போலீசார் நேரில் சென்றனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் , போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் 4 கட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை கைபற்றி போலீசார் அதை எண்ணி பார்க்கும் போது 7.5 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. பணத்தை கைப்பற்றிய போலீசார், சேரன் மாநகர் வீட்டில் தங்கியிருந்த புதுகோட்டை காதல் ஜோடி மற்றும் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் குறித்தும் விசாரித்து வந்தனர்.
பீளமேடு போலிசார் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டுகள் பிடிப்பட்ட அறையில் தங்கியிருந்த இரண்டு பேர் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்திய பீளமேடு குற்றப்பிரிவு போலிசார் நாமக்கல் சேர்ந்த தீப்சித்(24) என்பவர் வீட்டிலே web டிசைனிங் சென்டர் நடத்தி வந்ததாகவும், அதில் புதுக்கோட்டை சேர்ந்த ராகவேந்திரன்(21) பணி செய்து வந்ததாக தெரிகிறது.
கொரோனா ஊரடங்கு என்பதால் வருமானம் இல்லமால் தவித்து வந்தாகவும், வேறு ஏதாவது செய்யவேண்டும் என்பதால் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை web டிசைனிங் உதவியுடன் தயாரித்து உள்ளனர். இந்நிலையில் ராகவேந்திரன் உடன் படித்த நண்பர் ஊரில் இருந்து திருமணம் செய்துகொண்டு கோவை வந்துள்ளார். அவர்களுக்கு உதவி செய்யபோக போலி ரூபாய் நோட்டுகள் தயாரித்த விவகாரத்தில் சிக்கிகொண்டனர். மேலும் இருவரையும் போலிசார் சிறையிலடைத்தனர்.
-சீனி போத்தனூர்.
Comments