20 சதவீத போனஸ் வழங்கக்கோரி அனைத்து தொழிற்சங்க மின்வாரிய நிர்வாகிகள் போராட்டம்!!

     -MMH 


     பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி துணை மின்நிலைய செயற்பொறியாளர் அலுவலகம்  முன்பு அனைத்து தொழிற்சங்க மின்வாரிய நிர்வாகிகள் கலந்துகொண்டு  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20% போனஸ் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க தலைவர் மோகன் தலைமை தாங்கினார். தற்போது தமிழக அரசு 10% போனஸ் வழங்குவதாக அறிவித்திருக்கும் நிலையில் தற்போதுள்ள விலைவாசி உயர்வால் 10% போதாதே ஆகையால் தங்களுக்கு 20% போனஸ் வழங்கிட வேண்டும் என்றனர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments