25க்கும் மேற்பட்ட பாஜகவினர் தி.மு.க.வில் இணைந்தனர்!!

     -MMH 

 சிங்கம்புணரியில் 25க்கும் மேற்பட்ட பாஜகவினர், கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் பாஜகவினர் 25பேர் அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலாளரும்,முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏ வுமான திரு.கே.ஆர்.பெரியகருப்பன்  தலைமையில் தி.மு.கவில் இணைந்தனர்.

தி.மு.க ஒன்றியச்செயலாளர் ம.பூமிநாதன், வழக்குறைஞர் அ.கணேசன்,  திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ந.அம்பலமுத்து, சிவபுரி.எஸ்.சேகர், கதி.ராஜகுமார், கே.எஸ்.ராஜ்குமார், சி.தனுஷ்கோடி, ரெ.சிவகுமார், குடோன் மணி, குடோன் கதிர், குமரிபட்டி பெ.கணபதி, தலை வணங்காம்பட்டி இராசேந்திரன், ஆ.பாஸ்கரன், ஆ.மனோகரன், எம்.எஸ்.ஒய்.அலாவுதின் மற்றும் பலர் உடனிருந்தனர்.

-பாரூக்,சிவகங்கை.

Comments