மளிகைக்கடையில் ரூ. 40,000 மாமூல் கேட்ட விஜய் ரசிகர் கைது!

 

 -MMH 

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருணகிரி நாதர் தெருவில் மளிகைக்கடை நடத்தி வருபவர் பார்வதி.இவரது கடைக்கு டிப்டாப் வாலிபர் ஒருவர் தீபாவளிக்கு இரு தினங்கள் முன்பு வந்து, பார்வதி உரிமம் இல்லாமல் தீபாவளி பட்டாசு கடை நடத்தி வருவதாகவும்,  எனவே, அடுத்த நாள் காலை கடைக்கு வரும்போது 40 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இதனால் பயந்து போன கடை உரிமையாளர் பார்வதி, உடனடியாக பீர்க்கண்கரணை காவல் ஆய்வாளர் பொன்ராஜ் அவர்களிடம் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, வெள்ளை நிற சட்டை அணிந்த ஒரு டிப்டாப் வாலிபர் பணம் கேட்டு மிரட்டியது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு நபரை தேடி வந்த போது அந்த நபர் பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்ததது. 

அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை செய்ததில் அவர், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகி செந்தில்குமார் என்பது தெரியவந்தது. உடனடியாக அந்த நபர் மீது வழக்கு பதிந்து, கைதுசெய்தனர். மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

-பாரூக், ருக்மாங்கதன்.

Comments