காசிமேட்டில் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட 5 பேர்..4 பேரின் உடல்கள் மீட்பு!!

    -MMH


     சென்னை: சென்னை காசிமேடு பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற 5 பேர் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (19). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் அரியலூர் குடும்பத்தினர், உறவினரின் அக்கம்பக்கத்து வீட்டாருடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாட முடிவு செய்தனர்.இதனால் சென்னை காசிமேடு கடற்கரை பகுதிக்கு சென்றனர். இங்கு பாறைகள், பெரிய கற்கள் நிரம்பியுள்ளதால் இங்கு பலர் மாலை நேரங்களில் அமர்ந்திருப்பது வழக்கம். அந்த வகையில் காசிமேடுக்கு வந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் அங்கு கடலில் விளையாடி மகிழ்ந்தனர். அப்போது ராட்சத அலை ஒன்று அந்த 5 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இவர்கள் அனைவரும் 19 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்தது. காற்றின் திசை அதிகமாக இருந்ததாலும், கடல் சீற்றம் அதிகமாக இருந்ததாலும் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்களாலேயே நீச்சல் அடிப்பது சிரமம்.


இந்த நிலையில் இவர்கள் 5 பேரையும் இழுத்து சென்ற சில மணி நேரங்களுக்கு பிறகு அருள்ராஜ் (17), மார்ட்டின், விஷ்ணு, மார்க்ரெட் உள்பட 4 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. துர்காவை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.


Comments