இந்திய கடலோர காவல் படையில் 50 பணியிடங்களுகான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..!!

 -MMH

     இந்திய கடலோர காவல் படையில் 50 பணியிடங்களுகான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பிப்போரின் வயது 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்து. சம்பளம் மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.

50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், எஸ்சி, எஸ்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 5 சதவீத மதிப்பெண்கள் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்தகுதி குறைந்தபட்சம் 157 செ.மீ. எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 7ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-கிரி,கோவை மாவட்டம்.

Comments