நடமாடும் மோடி சேவை மையம்  இன்று  துவங்கப்பட்டது!!

     -MMH 


     கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் நடமாடும் மோடி சேவை மையம்  இன்று  துவங்கப்பட்டது. இதற்காக இரண்டு பேருந்துகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம்  பொது மக்களுக்கு மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம்  அனைவருக்கும்  வீடு திட்டம் மானியம் உள்ளிட்ட மத்திய அரசின் சேவைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சலுகைகளை பெற்றுத் தர இந்த நடாமடும் மோடி சேவை மையத்தை கோவை ஈச்சனாரி பகுதியில் அக்கட்சியின் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மோகன் மந்தராசலம் கட்சி கொடி அசைத்து துவக்கி இன்று  வைத்தார். 
 
மத்திய அரசின் சலுகைகள்,சான்றிதழ்கள் போன்றவை பெறுவதில் மக்களுக்கு  சிக்கல் இருப்பதால் இந்த நடமாடும் சேவை மையம் துவங்கப்பட்டு  இருப்பதாகவும் மேலும் இந்த நடமாடும் சேவை மையம் செல்லும் கிராமங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அன்றைய தினத்தில் தேவையான ஆவணங்களுடன் வந்து இந்த சேவையை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்தனர். 


நாளைய வரலாறு செய்திக்காக, 


-M. சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments