தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! -

      -MMH  


     தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்... - தமிழகக் கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
 
     சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். 
 
     கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்) கோத்தகிரி  (நீலகிரி) 8,திருமூர்த்தி அணை (திருப்பூர்) 7, அமராவதி  அணை (திருப்பூர்), குன்னூர் (நீலகிரி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) தலா 5, ஓட்டன்ஞ்சத்திரம்   (திண்டுக்கல்) 4, பெரியகுளம்  (தேனி), வால்பாறை   (கோவை) தலா 3. 


-கிரி,கோவை மாவட்டம். 


Comments