பொள்ளாச்சி உடுமலை சாலையில் விபத்து..!!

    -MMH


     பொள்ளாச்சி கிழக்கு உடுமலை சாலை மின் நகர் அருகில் விபத்து. பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டு இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் டெம்போ விபத்துக்குள்ளானது. டெம்போவை ஓவர் டேக் எடுக்க முயலும் போது இருசக்கர வாகனம் டெம்போவின் இடையில் மாட்டிக்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவசர சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பொள்ளாச்சி காவல்நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments