டெல்டா மாவட்டங்களில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு!!

     -MMH


     கொரோனா பாதிப்பு பொதுவாக தமிழகம் முழுவதும் குறைந்து வருகிறது.தமிழகம் முழுவதும் நேற்று 70297  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2481 பேர் பாதிக்கப்பட்டு நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்கள் இதனை அடுத்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 7,29,507 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 27,273 பேர்.


நேற்று மட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை 31 பேர் டெல்டா மாவட்டத்தில் தொற்றுக்கு உள்ளானவர்கள் இன்  விவரம்
தஞ்சாவூர் 48 திருவாரூர் 49  புதுக்கோட்டை 17 பெரம்பலூர் 4 அரியலூரில் 7  நாகப்பட்டினம் 23 தஞ்சாவூரில் இதுவரை  நோய்க்கு ஆளானவர்கள் மொத்த  எண்ணிக்கை 15 ஆயிரத்து 442, திருவாரூரில் 9 ஆயிரத்து 233 நாகையில் 6075 புதுக்கோட்டையில் 10,635 
அரியலூரில் 4,393 பெரம்பலூரில் 2,153. தீபாவளி நேரத்தில்  நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாக இருப்பதே மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-இராஜசேகரன்,தஞ்சாவூர்.


Comments