உடல் சூடு குறைப்பதற்கு ஒரு எளிய முறை!!

     -MMH 


     இயல்பாகவே நமது உடலில் குறைந்தபட்ச தேவைக்கான வெப்பம் இருக்கும். இது காலநிலை மாற்றம் மற்றும் உடலில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக திடீரென அதிகரிக்கும். இதனால் உடலில் சூடு அதிகரித்து, பிற நோய்களுக்கும் உள்ளாக நேரிடும்.


    உடலின் வெப்பம் உடலின் இயக்கத்திற்கு கட்டாயம் தேவையான ஒன்று. உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும், ஜீரண பணிகள் நடைபெறவும் உடல் வெப்பம் முக்கிய காரணியாக இருக்கிறது. அதிகளவு உடல் சூடு ஏற்பட்டால் தேவையற்ற நோய்களும் நம்மை தாக்கும். உடல் சூடு அதிகமானால் எப்படி குறைப்பது என்பதை இனி காண்போம்.


சிறிதளவு நல்லெண்ணையை எடுத்து மிதமான சூடாக்கி, அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை சேர்த்து வதக்கவும். இந்த கலவை ஆறியதும், இரண்டு கால்களின் பெருவிரல் நகத்தில் பூசி விட்டு, 2 நிமிடத்திற்கு பின்னர் கழுவினால் உடல் குளிர்ச்சி அடையும். இதனை சளி மற்றும் காய்ச்சல் உள்ளவர்கள் தவிர்த்துவிடலாம். வெப்பத்தால் ஏற்பட்ட மனஅழுத்த பிரச்சனையை சரி செய்யவும் இது உதவும்.


-ஸ்டார் வெங்கட் .


Comments