வால்பாறை தேயிலை தொழிலார்களுக்கு போனஸ் வழங்க முன்னாள் M.L.A. கோரிக்கை!!

     -MMH


        கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இந்த வருடம் தனியார் நிறுவனங்கள் 20% போனஸ் வழங்கிட வேண்டும். மேலும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி பாதுகாக்க வேண்டும் என முன்னாள் வால்பாறை சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர் ஒருவர் கூறுகையில்: "வெளியூரில் இருந்தாலும் முன்னாள் எம்.எல்.ஏ எங்கள் மீது அக்கறை கொண்டுள்ளார். எங்களுக்காக அவர் குரல் கொடுத்து வருகிறார். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சார்பாக அவரை வாழ்த்துகிறேன்" என்றார்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.


Comments