யார்..! இந்த கமலா ஹாரிஸ்!!

      -MMH


 கமலாதேவி ஹாரிஸ் சமீபத்தில் கூகுளில் தேடும் பெயர்களில் ஒன்று .
இவர் ஏன் எல்லாராலும் தேடப்படுகிறார். இவர் வேறு யாரும் இல்லைங்க நம்ம வீட்டு பொண்ணு தான் ஆமாங்க என்ன ஆச்சரியமா பாக்குறீங்க இவங்க தாத்தா தமிழ்நாட்டுல சோழமண்டலத்தில் இருக்குற மன்னார்குடி பக்கத்துல இருக்குற துளசேந்திரபுரத்தில் பிறந்தவர் . தாத்தா சரி  பேத்தி யாருன்னு தானே கேக்குறீங்க இவங்க தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவபவர்.



 என்னங்க வியப்பா இருக்கா உண்மைதாங்க இவங்கள பத்தி சொல்றேன் கேட்டுக்கோங்க. இவங்க அக்டோபர் 20  1960 ல் பிறந்தாங்க. இவர் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் ஆசிய அமெரிக்கர் என்னங்க குழப்பமா இருக்கா! இவங்க அம்மா இந்தியர்ங்க, அப்பா ஆப்பிரிக்க நாடான ஜமைக்காவை  சேர்ந்தவர்ங்க .


கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா கோபாலன் ஒரு   தமிழர் அவங்க ஒரு  தலைசிறந்த புற்றுநோய் நிபுணர்ங்க 
1960 லேயே அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து விட்டார்கள் கமலாவின் தந்தை ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர், ஜமைக்கா வை சேர்ந்தவர், கமலாவிற்கு ஒரு சகோதரி அவங்க பெயர் மாயா கமலா ஹாரிஸ் அடிப்படையில ஒரு வழக்கறிஞர் .2016 ல் அமெரிக்க மேலவையில் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார் இவருடைய முற்போக்கான கருத்துக்களால் அமெரிக்க அரசியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.


 அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிகாரிகளை கடுமையாக பலமுறை விமர்சித்தவர், அமெரிக்க மக்களாட்சி கட்சியில்  ஒரு பெண்ணாக  தனியாக நின்று சாதித்தவர், தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2020 அதிபர் தேர்தலில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன்  உடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த கட்டுரை வெளிவரும் நாள்ல அவர் துணை அதிபர்  ஆகியிருப்பார்.


சரிங்க இப்ப அவங்க தாத்தாவைப் பற்றி தெரிந்து கொள்வோம். அவங்க தாத்தா பெயர் கோபாலன்னு  ஏற்கனவே  பார்த்தோம்.
அவர் பழைய ஐ.சி.எஸ் ஆபிஸர்ங்க என்னங்க புரியலையா முந்தைய ஆங்கிலேயர் காலத்தில் இந்தியன் சிவில் சர்வீஸ் எனப்படும் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்று பணி புரிந்தவர், தஞ்சை மாவட்டம் மன்னார்குடி வட்டம் துளசேந்திரபுரம் தை பூர்வீகமாக கொண்டவர்  அவர் தாங்க  மேடம் கமலாவிற்குக்கு இன்ஸ்பிரேஷன், அவங்களுக்கு ஒரு  ஊக்கம் தந்தவர்,   மேடம் எழுதிய THE TRUTHS WE HOLDங்கிற   புத்தகத்தில்  சொல்லி இருக்காங்க தாத்தா அரசுத்துறையில் உயர்ந்த பதவியில் இருந்ததால் அவர்களுக்கு இயல்பாகவே அரசியலில் ஆர்வம் வந்துவிட்டதாக அவங்க சொல்றாங்க.
நாளைய வரலாறு  இதழுக்காக


-இராஜசேகரன்,தஞ்சை.


Comments