கோவை சரவணம்பட்டி பகுதியில் இ பைக் ஷோரூம் திறப்பு!!

      -MMH


      கோவை சரவணம்பட்டி பகுதியில் பேட்டரி வாகனங்களுக்கான பிரத்யேக சி.கே.மோட்டார்ஸ்  ஷோரூமை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் திரு அன்பரசன் திறந்துவைத்தார்.


        நாடு முழுவதும் மிக வேகமாக அதிகரித்து வரும் வாகனங்கள் எண்ணிக்கையால் காற்று மாசு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பேட்டரியால் இயங்க கூடிய வாகனங்களால்  சுற்றுச்சூழல் மாசு படுவது தவிர்க்கப்படுவதால், தற்போது பேட்டரியால் இயங்கும் மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பேட்டரி வாகன விற்பனையில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் சி.கே.மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிளை கோவை சரவணம்பட்டியில் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் திரு.அன்பரசன் ஷோரூமை திறந்து வைத்தார். விழாவில் சி.கே மோட்டார்ஸ்-ன் வணிக தலைவர் குணசேகரன், ஷோரூம் இயக்குனர்கள் அருண் மற்றும் பிரவீன்  ஆகியோர் கலந்து கொண்டனர். கோவையில் முதல் கிளையாக துவங்கியுள்ள இதில் பேட்டரி வாகனங்களுக்கென துவங்கப்பட்ட இந்த ஷோரூமில், லித்தியம் பேட்டரியால் இயங்கும் ஸ்கூட்டர்கள், மொபட்டுகள் மற்றும் சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. அழகான தோற்றத்துடன் மஞ்சள், நீலம், வெள்ளை என பல வண்ணங்களுடன் உள்ள இந்த வாகனங்கள், ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் செல்வது , 80 கிலோ மீட்டர் மற்றும் 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்வதால் இந்த வாகனங்கள் தற்போது பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.


-சீனி.போத்தனூர்.


Comments